|
நாகர்கோவில் டிச 23 : குமரி மாவட்டம் அருமனையில் இன்று இரவு கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது :
திருமங்கலம் தொகுதியில் தி.மு.க.வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் முழு ஆதரவு அளிக்கும். தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. சத்தியமூர்த்தி பவன் தாக்குதல் திட்டமிட்ட செயல் அல்ல. அது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு. இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன். ஆனால் தமிழக காங்கிரசார் இதை பெரிதுபடுத்தி விட்டனர். தங்கபாலுவும், இளங்கோவனும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர விரும்புகிறார்கள். அதற்காக எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கைகள்தான் விடுதலைச் சிறுத்தைகள் மீதான மோதல். தமிழ் ஈழம் அமைய உலக அளவில் ஆதரவு திரட்டும் மாநாடு வருகிற 26-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் இளஞ்சிறுத்தைகள் பாசறையின் தொடக்க விழாவும் நடைபெறும். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார். Last update : 24-12-2008 00:15
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|