|

தேவையான பொருட்கள் :
வேகவைத்த முட்டை : முன்று ,பெரிய வெங்காயம் : 1 கப்,தக்காளி: 1 கப்
மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்,உப்பு : தேவையான அளவு,இஞ்சி -பூண்டு:விழுது
தாளிக்க :
சோம்பு
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
கறிவேப்பிலை
எண்ணெய்
(இவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)
அரைக்க :
தேங்காய் : அரை கப்
கசகசா : கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் : 4
முந்திரி பருப்பு : 5
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, இஞ்சி -பூண்டு:விழுது ,அரைத்த தேங்காய், மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து இறக்கவும். நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து வேக வைத்த முட்டையை அந்த குருமாவில் போடவும். Last update : 15-01-2009 21:00
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|