
தேவையான பொருட்கள் :
கோழி : அரை கிலோ.பாஸ்மதி அரிசி : இரண்டு கப் ,பெரிய வெங்காயம் : 1 கப்
நறுக்கிய தக்காளி : 1 கப்,மல்லி இலை : ¼ கப்,தேங்காய் பால் : 1 கப்
பொதினா தலை : ¼ கப்,மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்,உப்பு : தேவையான அளவு
தாளிக்க :
சோம்பு : கால் ஸ்பூன்
பட்டை : கிராம்பு
ஏலக்காய் : இரண்டு
கறிவேப்பிலை : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
அரைக்க :
சோம்பு : கால் ஸ்பூன்
இஞ்சி : 1/2
பூண்டு : 4
கசகசா : கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் : 4
கரம் மசாலா : ஸ்பூன்
கிராம்பு : இரண்டு
(இவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)
(அரிசியை இரண்டு கப் தண்ணீர் விட்டு உறவைக்கவும்,பிறகு தண்ணீர்யை வடித்துவிடவும் .ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வறுத்து கொள்ளவும் )
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த மசாலா ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு ,பொதினா,மல்லி இலை,கோழி, ,தேங்காய் பால் ,பாஸ்மதி அரிசி முன்று டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக விடவும். நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தளை தூவி இறக்கவும். Last update : 15-01-2009 20:38
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|