|
பழைய ஹிட் படங்களை ரீமேக் செய்வது தமிழ்சினிமாவில் வழக்கமாகிவிட்ட ஒன்று. தனது செம்பருத்தி மகனின் மணவாழ்க்கையில் "கிரகம்" சரியாக ஒத்துவராததால் விவாகரத்து வாங்கி அவதிப்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து அப்பா நொந்து போய்விட்டார். மேலும் மகனின் திரை வாழ்கையில் ஹிட் கொடுத்தே நாளாகிவிட்ட நிலையில் தனது பழைய ஹிட் படமான மலையூர் மம்பட்டியானை தனது மகனை ஹீரோவாகப்போட்டும்,மல்லிகைப்பூ நடிகையை ஹீரோயினாக போட்டும் படமெடுக்கிறார் "தியாகமான" அப்பா.
நாளாக நாளாக ஹீரோ - ஹீரோயின் இருவரிடையே நிஜக்காதல் பற்றிக்கொண்டுவிட்டது. ஹீரோவும் பழைய நினைவுகளை உதறிவிட்டு மலர்ந்த முகத்துடன் செட்டில் வளைய வருகிறார். ஹீரோயினும் அதற்கேற்றாற்போல் ஈடுகொடுத்து நடிக்கவும் , வெளியே கம்பனி கொடுத்தும் வருகிறார். படமெடுக்கும் அப்பாவிற்கோ இதனால் சந்தோஷம். ஒன்று படத்தில் கெமிஸ்டிரி நன்றாக ஒர்கவுட் ஆகிறது, மற்றொன்று தனது மகனின் சந்தோஷம்....ஆனால்..மல்லிகையின் காதலன் மாண்டலினின் கதி...
இசைக் கலவையைத் தான் மணப்பேன்.அதற்குள் அனைத்து படங்களை முடித்துவிட்டு மணப்பேன் என்ற டயலாக்குகளை நம்பி காத்துக்கொண்டிருக்கும் இசைமேதைக்கு அல்வாவா? அல்லது
படம் ஓடவேண்டும் என்பதற்காக பப்ளிசிடி வேண்டி ஹீரோ-ஹீரோயின் காதல் மம்பட்டியானின் திட்டமா?
மல்லிகைப்பூ எங்கே மணக்கபோகிறது?
Last update : 22-04-2009 06:05
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|