Calendar Date

Jul
22
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

               வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்              ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி              பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!              கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்      
Please install the DS-Syndicate component.
2008 படங்கள் : ஒரு அலசல் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 06-04-2008 06:37

Favoured : 920

Published in : திரையுலகம், திரைவிமர்சனம்

2008 -  கடந்த மூன்று மாதங்களில் 26 படங்கள் வெளியாகியுள்ளன. இதுவரை தமிழ்த் திரையுலகிற்கு பேர் சொல்லும் படி எந்த படமும் வெளியாகவில்லை. பல பெரிய பட்ஜட் படங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டன. சில சிறிய பட்ஜட் படங்கள் சிலிர்த்துக் கொண்டன. குறிப்பாக பொங்கலன்று 12 படங்கள் வெளியாகி பொதுமக்களிடம் வசை வாங்கிக் கொண்டன. மொத்தத்தில் வெற்றி, தோல்வி என பின்வருமாறு கணக்கிட்டு பார்ப்போம்.

2008-ல் வெளியான படங்கள்

1.பிடிச்சிருக்கு
2.பீமா
3.தங்கம்
4.பழனி
5.காளை
6.இந்திரலோகத்தில்  நா.அழகப்பன்
7.பிரிவோம் சந்திப்போம்
8.சாது மிரண்டால்
9.அஞ்சாதே
10.தூண்டில்
11.சில நேரங்களில்
12.அக்கு
13.தோட்டா
14.வைத்தீஸ்வரன்
15.சிங்கக்குட்டி
16.வெள்ளித்திரை
17.கண்ணா
18.கண்ணும் கண்ணும்
19.இன்பா
20.தரகு
21.கட்டுவீரியன்
22.வேதா
23.சண்டை
24.வம்புச்சண்டை
25.நெஞ்சத்தைக் கிள்ளாதே
26.வாழ்த்துக்கள்

பாக்ஸ்-ஆபிஸ் ஹிட் :  வசூல் ரீதியாக  வெற்றிப்பெற்ற படங்கள்

அஞ்சாதே :  நண்பர்கள்  எதிரிகளாக  மாறும் அழகான, சாதாரண கதை. நரேன், அஜ்மால் மற்றும் பிரசன்னாவின் சிறந்த நடிப்பினாலும், சிறிய பட்ஜட் படமாயினும் சிறந்த திரைக்கதை மற்றும் வசனமிருந்தால் படம் வெற்றி பெரும் என்பதற்கு அஞ்சாதே ஒரு சிறந்த உதாரணம்.

பிரிவோம் சந்திப்போம் : ஒரு குத்துப்பாட்டு, ஒரு சண்டை என கணக்கு போட்டு படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் சிறிய குடும்ப வட்டத்திற்குள் அழகான படம் எடுத்த இயக்குனர் பழனியப்பனுக்கு நூறு சபாஷ் சொல்லலாம். சேரனும் சினேகாவும் கணவன் - மனைவியாகவே வாழ்ந்துள்ளனர். கூட்டுக் குடும்பத்தை அழகாக காட்டியுள்ள பிரிவோம் சந்திப்போம "A" சென்டர்களில் வெற்றிபெற்று  விநியோகிஸ்தர்களை குளிர வைத்துள்ளது.

கண்ணும் கண்ணும் : பிரசன்னாவிற்கு இது ஜாக்பாட் வருடம் போலும்! அஞ்சாதே-வில் வில்லனாய் கலக்கியவர், உதயாதாராவுடன் டூயட் பாடி ஜெயித்துவிட்டார். குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.

எதிர்பார்ப்பிற்கு எதிராக அமைந்த படங்கள் :

காளை : வல்லவனின் வெற்றிக்குப் பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வந்த படம். லிட்டில் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்திற்கேற்ப "லிட்டில்" கவனமாவது படத்தில் செலுத்தலாம். வெறும் விரல் வித்தையும், கை சொடுக்கை மட்டும் ரசிகன் ரசிக்கமாட்டான் என்பதற்கு காளை ஒரு சிறந்த உதாரணம்.

வெள்ளித்திரை : பிரகாஷ்ராஜிற்கு போதாத காலம் போலும்! பக்கத்து மாநிலத்திலுருந்து சுட்ட அருமையான கதை, பிரகாஷ்ராஜிற்கே உரித்த திறமையான நடிப்பு என அனைத்து அம்சங்களுடன் படம் இருந்தாலும் ரசிகர்கள் வெள்ளித்திரையை வெள்ளித்திரையில் பார்க்க ஆவல் காட்டவில்லை. மனம் தளராதீர்கள் பிரகாஷ்ராஜ் அடுத்த படத்தில் பிடியுங்கள்??

நெஞ்சத்தை கிள்ளாதே : காதல் கோட்டையை மறுபடியும் ரசிகர்கள் பார்க்க விரும்பவில்லை


இந்திரலோகத்தில்  நா.அழகப்பன் : புலிகேசிக்குப் பிறகு புலியாய் திரிந்து வந்த வடிவேலுவின் மார்க்கெட் இந்திரலோகத்தில்  இருக்க வேண்டியது, இப்படம் அதாளபாதாளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. கேவலமான திரைக்கதை, படு மோசமான இயக்கம் என பட்டியல் நீளுகிறது. ரிலீசான ஒரே வாரத்திற்குள் பெட்டியில் படுத்துக் கொண்டது.

பீமா : கிட்டத்தட்ட இரண்டு வருடத்திற்கு பிறகு விக்ரமை வெள்ளித்திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் ஒரு  சராசரி சினிமா பார்பவனைக் கவரவில்லை. விளைவு! ஆரம்பத்தில் படு ஜோராக பேசப்பட்ட இப்படம் நாளிடைவில் தேய்ந்து போனது. விக்ரமின் பட வரிசையில் பீமா ஒரு சாதாரண படமாகிப் போனது.

தற்பொழுது சண்டை மற்றும் கட்டுவீரியன் "பீ" மற்றும் "சி" சென்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இவை வெற்றிப்படமாக அமையுமா? காலம்தான் பதில் சொல்லும்!

Last update : 12-04-2008 05:55

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
S78         63M      
  F    I      U   T44
G9T   KWF   YRN      
  A    8    J     9PS
QN8         X59      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Newer news items
Older news items
<< Previous Page          
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW