|
பக்கம் 1 / 2 சமீப காலமாக, அதிகாலை FM கேட்பதிலிருந்து மாறி, வெறும் தெலுங்கு பாடல்களா பாலு கேட்டுக்கொண்டிருந்தான்.
"கிரிக்கெட் மாட்ச் பார்க்காம, அதிசயமா சனிக்கிழமை ஆபிஸ்-ல என்னடா பண்ணற"
"பாஸ், எங்க தல கங்குலி ரிட்டயர் ஆனதிலிருந்து, ஐ ஸ்டாப்டு வாட்ச்சிங் கிரிக்கெட்"-னு சொல்லிட்டு ஐந்தாவது முறையாக ஏதோ "நுவு நுவு"-னு தெலுங்கு பாட்டு பாடினான்.
"என்னடா ரொம்ப சந்தோசமா இருக்கிற"
"பாஸ், சந்தியாவுக்கு இன்னைக்கு பர்த்டே, காலைல தான் சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பி, விஷ் பண்ணேன்"
"எப்படிடா கண்டுபிடிச்சே உண்மையான பர்த்டே-ய"
"பாஸ், Paulo Coelho என்ன சொல்றார்னா, When a person really desires something, all the universe conspires to help that person to realize his dream, மெதொடிகல் அப்ரோச் பாஸ், சந்தியாவோட உண்மையான பர்த்டே யாருக்கு தெரியும்"
"ம்ம்ம்.. அவ அப்பா, அம்மா கூட பிறந்தவங்க, இல்லனா அவ பிரண்ட்ஸ்"
"சரி, அவ வீட்டுக்கு கால் பண்ணி, அவளோட தம்பி கிட்ட, நாங்க ICICI-ல இருந்து கால் பண்றோம், வெரிபிகேஷனுக்காக, உங்க அக்காவோட உண்மையான டேட் ஆப் பர்த் சொல்லுங்கனு கேட்டேன்,
பையன் அப்பாவி பாஸ், அம்மா கிட்ட கேட்டு, கரெக்ட்டா சொல்லிட்டான்"
"வீட்டு போன் நெம்பர் தான் டேடாபேஸ்ல இருக்காதே, எப்படி கிடைச்சுது"
"அது சிம்பிள் பாஸ், சந்தியாவ பாலோ பண்ணி அவ வீட்டு அட்ரெஸ கண்டுபிடிச்சேன், அப்புறம் karnataka.bsnl.co.in-ல அட்ரெஸ குடுத்தேன், அவ அப்பா பெயர்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கிற வீட்டு நெம்பர கரெக்ட்டா குடுத்துடிச்சு, பிஎஸ்என்எல் வாழ்க"
"நீ திருந்த மாட்டடா, எப்ப உனக்கு ட்ரிட் தர போறா"
"இன்னைக்கு ஈவினிங்"
சனிக்கிழமை பிற்பகல். வினய் பற்றிய சோகம் அலுவகத்தில் மறக்கப் பட்டிருந்து. "எப்படிடா வினய்-வோட கேர்ள்பிரண்ட் சுதா-வ தெரியும்"
"வினய் புதுசா சேர்ந்ததால, அவனோட இன்கமிங், அவுட்கோயிங் மெயில செக்குரிட்டிக்காக கொஞ்சம் படிக்கவேண்டியதா இருந்தது, சுதா-னு சொல்லிட்டு ஒரு பொண்ணுகிட்ட இருந்து மெயில், அதும் நம்ப காம்பிடிங் கம்பனில வேலை பண்றா, ஆனா நோ டிரான்ஸ்பர் ஆப் கான்பிடன்ஷியல் இன்போ, பட் "யூ ஆர் மாஸ்குலைன், ஐ வாண்ட் யூ" மாதிரி நிறைய மெசெஜஸ்"
அப்ப தான் பாலு போன் சிணுங்கியது... பேசிவிட்டு சொன்னான்.
"பாஸ், நஞ்சுண்டப்பா வரார். வினய் மர்டர் கேஸ் சால்வ் ஆயிடுச்சாம்"
"என்னது?"
நஞ்சுண்டப்பா வந்தவுடன் நாங்களும் கார் பார்க்கிங் சென்றோம்.
"என்ன சார், சுதா எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாளா"
"சுதா இல்ல பாலு, ப்ரீத்தியையும், அவ காதலன் நவீனையும் அரெஸ்ட் பண்ணியிருக்கோம், முதல்ல சந்தேகத்துலதான் அரெஸ்ட் பண்ணோம், அப்புறம் ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டாங்க"
<< முதல் < முந்தைய 1 2 அடுத்த > கடைசி >> Last update : 02-12-2008 03:35
|