Calendar Date

Sep
09
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       பிரபல திரைப்பட நடிகர் முரளி திடீர் மாரடைப்பால் மரணம்       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

அழகிய இரக்கமற்ற பெண்ணே - 3 : செந்தில் குமார் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 22-11-2008 21:47

Favoured : 11

Published in : இலக்கியம், தொடர்

நேற்று, அந்திம நேரம் கடந்து இன்னர் ரிங் ரோடில் பைக்கை நிறுத்தி பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள், யாரோ நாலு பேர் காரில் வந்திருக்கிறார்கள், உருட்டுக் கட்டை, பேட், ஹாக்கி ஸ்டிக் எல்லாம் கொண்டு வினய்-யை தாக்கியிருக்கிறார்கள். இந்திரா நகர் சப்-இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். பாலுவும் அவரும் ஏதோ பால்ய சிநேகிதர்கள் போல பேசிக்கொண்டனர்.

"சார், இவர் என் பாஸ்"

"பாஸ், இவர் நஞ்சுண்டப்பா, சப்-இன்ஸ்பெக்டர்"

"க்ரைம் இன்னர் ரிங் ரோடில் நடந்ததனால நான் விசாரிக்க வேண்டி இருக்கு"

சலித்துக் கொண்டார். 45 அல்லது 50 வயது இருக்கலாம். பியர் தொப்பை. எதற்காக கூலிங் கிளாஸை கழட்டாமல் இருக்கிறார்? தெரியவில்லை.

"எப்படிடா போலிஸ் எல்லாம் பழக்கம்"

"அக்க்ஷயா பார்-ல நாங்களாம் ரெகுலர் கஸ்டமர்ஸ், Smirnoff உள்ள போச்சினா, எங்க உலகத்துல யாரும் வர முடியாது"

"நீ திருந்த மாட்டடா"

நான், நஞ்சுண்டப்பா, பாலு, ப்ரீத்தி  மட்டும் தனியாக இருந்தோம். கன்னடா-வில் கேள்வி கேட்டார்.Image

"சரியா எத்தனை மணிக்கு நீங்க ரிங் ரோட்ல இருந்தீங்க"

"எட்டு எட்டரை மணி இருக்கும்"

கொஞ்சம் தேம்பினாள், விம்மினாள், அழுதாள்.

"அதுக்கு முன்னாடி எங்க போனீங்க"

"பாரிஸ்டா காபி பார்"

"எந்த பாரிஸ்டா"

"கோரமங்களா 5-வது பிளாக்"

"அப்புறம்"

"இன்னர் ரிங் ரோட்ல, அந்த சின்ன பிரிட்ஜ் கிட்ட நின்னுட்டு இருந்தோம்,

flight landing point-la"

"அது என்னடா ப்ளைட் லேண்டிங் பாய்ண்ட்" இது நான்.

"பாஸ், IRR-ரோட்ல, ஏர்போர்ட் போற வழியில, ஈஜிபுரா சிக்னல் தாண்டி, அந்த சின்ன பிரிட்ஜ்-ல இருந்து பாத்தா ப்ளைட் லேண்ட் ஆகுறது நல்லா தெரியும், இப்ப புது ஏர்போர்ட் தேவனஹள்ளிக்கு போயிட்டதால, அது காதலர்களுக்கு மறைவான இடம்"

"ம்ம்ம்"

"எவ்வளவு பேர் வந்தாங்க"

"நாலஞ்சு பேர் இருப்பாங்க"

"எதுல வந்தாங்க"

"நான் கவனிக்கல"

மறுபடியும் அழுதாள். எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும். எப்படி எப்படி எல்லாம் வாழவேண்டும் என யோசித்திருப்பார்கள். எவ்வளவு அந்நியோன்யமாக வண்டியில் அவனை அணைத்துக்கொண்டாள். இப்பொழுது அவன் உயிறற்று, இவள் அவன் நினைவுகளோடு மட்டும். வள்ளுவன் சொன்ன  "நெருநெல் உளனொருவன்.."தான் ஞாபகம் வந்தது.

இன்னும் கொஞ்சம் கேள்வி கேட்டார்.

பின்னர் கொஞ்சம் தேறியவுடன் கேட்கலாம்

என விட்டுவிட்டார்.வெளியே வந்தோம்.

"எஃப்.ஐ.ஆர் போடனும், எவிடன்ஸ் சேகரிக்கனும்,

டாக்டர் சர்டிபிகேட், பி.எம் ரிப்போர்ட் எல்லாம் வேணும்,

லாங் வே டு கோ, இந்த சாப்ட்வேர் வந்ததுல இருந்து

குற்றம் அதிகமாயிடுச்சி"என்றார்.

நாங்கள் கிளம்பும்போது தான் பாலு, இன்ஸ்பெக்டரிடம் சொன்னான்.

"சார், நீங்க ஒரு முறை சுதா-வ விசாரிச்சிடுங்க"

"யாரிந்த சுதா?"

"வினய்-யோட முன்னால் கேர்ள்பிரண்ட்"

 

..... தொடரும்

Last update : 22-11-2008 21:58

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
4U5         BLT      
7 R    I    R     5K8
6MK   E6O   LTI      
  U    2    P N   BM7
OAI         JLN      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW