| கமலஹாசனின் மர்மயோகிக்கு மூடுவிழா ? |
|
|
|
| Wednesday, 12 November 2008 | |
கோடம்பாக்கத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஹாட் டாக் "மர்மயோகியின்" மூடுவிழா பற்றியது தான்.மர்மயோகி படம் அறிவித்தது முதல் அனைத்து விசயங்களும் மர்மமான முறையில் நடந்து வந்தன. ஹீரோயின் முதல் ஒளிப்பதிவாளர் வரை மிகவும் சீக்ரெட்டாக வைத்த வண்ணம் இருந்தனர். இதனால் பத்திரிக்கைகளில் மர்மயோகி குறித்து பல விசயங்கள் பலவிதமாக வந்தன. இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் கமலஹாசன் சாய்மீரா நிறுவனத்துடன் ஒரு பிரஸ்மீட்டை நடத்தி மர்மயோகி குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டார். இது நடந்து சில நாட்களில் திரிஷா மற்றும் ஸ்ரேயாவை புக் செய்ததாக கூறப்பட்டது. மேலும் அவர்கள் இப்படத்திற்காக மார்சியல் ஆர்ட்ஸ் பயின்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம ஒரு முடிவு வந்துவிட்டது போல் தெரிகிறது. இப்படத்திற்கான பட்ஜெட் அதிகமாதலால் ராஜ்கமல் இண்டர்நேஷனல் சாய்மீரா நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. சமீபத்திய காலமாக சாய்மீரா நிறுவனம் தயாரித்த படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆனதால் மர்மயோகிக்கு பைனான்ஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளது. கமலஹாசனோ சாய்மீராவிடம் 100 கோடி எதிர்ப்பார்த்திருந்தார். மேலும் படப்பிடிப்பு 2 ஆண்டுகளுக்கு மேல் போகுமென்பதால் சாய்மீரா நிறுவனம் கையை விரித்து விட்டது. இதனால் கமலஹாசனும் மர்மயோகிக்கு மூடுவிழா செய்துவிட்டு அடுத்த படத்தில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. கமல் சார் முதலில் மருதநாயகன் ! இப்போ மர்மயோகியா??? |
|
| புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Monday, 29 December 2008 ) |
Newer news items
- அரசியல் அனுபவம் இல்லை;விஜய் -02/02/2009
- நான் கடவுள் பிப்ரவரி 6 - ல் ரிலீஸ் -01/02/2009
- இலியானா டோலிவுட்டுக்கு குட்-பை -01/02/2009
- கன்னடத்தில் நம்பர் ஒன் சம்பளம் வாங்கும் நடிகை -01/02/2009
- தநா 07 அல 4777 -31/01/2009
| < முந்தைய | அடுத்த > |
|---|
Newer news items
- மீன் வறுவல் - 'அதிகாலை' அகல்யா -18/02/2008
- இறால் வறுவல் - 'அதிகாலை' அகல்யா -18/02/2008
- சிக்கன் பிரியாணி -அதிகாலை அகல்யா -15/01/2008
- மட்டன் பிரியாணி - அதிகாலை அகல்யா -15/01/2008
- செட்டிநாடு கோழிக்குழம்பு -12/01/2008
Older news items
- கோழி குருமா - அதிகாலை அகல்யா -29/12/2007










கோடம்பாக்கத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஹாட் டாக் "மர்மயோகியின்" மூடுவிழா பற்றியது தான்.
