Calendar Date

Jan
31
2015
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

        அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்                     கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி                     பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !      
Please install the DS-Syndicate component.
About us PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 03 January 2008

வணக்கம்!

கன்னித் தமிழை கணினித் தமிழாக்கிய, நம் தமிழ் ஊடகச் சிந்தனையாளர்களை சிரம் தாழ்த்தி கரம் கூப்புவோம். அச்சு ஊடகத்தில் பயணம் செய்யும் நம் தமிழ்த் தாயின் அடுத்த வாகனம் இணையம். இணையத்தில், இனி அவளின் கொடிதான். எனவே பசுந்தமிழுக்கு இணைய வழி பல்லக்குத்தூக்கும் பணியில் இதோ...நாங்களும் அதிகாலை.காம் என்ற பெயரில்.

எமது தளம், எந்தவொரு அரசியல் சார்புக்குள்ளும் அடைபடாதது. சித்தாந்த கூண்டுகளுக்குள் சிறை படாதது. குழு மனப்பான்மைக்குள் கூடாரம் போடாதவை. முற்றிலும் நம் தமிழ்ச் சமூகத்தின் உச்சமே, நமது எல்லை. மானுடம் வெல்வதே நமது மந்திரம்!

 

உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப் படைதான் எமது தளத்தின் வேர்கள். எமது பின்புலமாய் சமூக அக்கறையுள்ள சில மாமனிதர்கள். 

 

உடனடிச் செய்திகள், அரசியல், இலக்கியம், திரை உலகம், ஆன்மீகம், வர்த்தகம், பிரபலங்களின் நேர்காணல், குறும் படங்கள், புகைப்படத் தொகுப்பு, சூடான விவாதங்கள், மருத்துவ ஆலோசனைகள், சமூக நிகழ்வுகள், சமையல், சின்னத்திரை, சுற்றுலா, வணிகம், களஞ்சியம், குரல் நூலகம், பாட்காஸ்ட்... இப்படி பலவும் இங்கே ஆழமுடன் இடம்பெறும். சுருங்கச் சொல்வதாயின் "சாப்பாடு முதல் சாஃப்ட்வேர் வரை-சமூகத்தின் சகல்திற்குமான விசயங்கள், சராசரி மனிதருக்கும் எட்டும் வகையில்" எடுத்து வைக்கப்படும்.

 

எமது தளத்துக்கான ஆலோசனைகள் எத்திசையிலிருந்து வந்தாலும் அன்போடு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் எமது பயணத்தில் தோள் கொடுக்க விரும்பும் அன்பு நெஞ்சங்களையும் அரவணைத்துக் கொள்ள தயாராகவே இருக்கிறோம்.

 

இப்படி முழுக்க முழுக்க, நம் சமூகத்தின் குரல் உங்களுக்காகவே ஒலிக்கும். கொஞ்சம் உற்றுக் கேளுங்கள்..... இது உங்களுக்கான குரலும்... உங்களின் குரலும்தான்!

 

இத்தளத்தில் பிரசுரமாகும் படைப்புக்களுக்கு அந்தந்தப் படைப்பாளிகளே பொறுப்பு - அதிகாலை பொறுப்பல்ல.

 

நிறைகளையும், குறைகளையும் தாராளமாக எழுதுங்கள். இந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை.

 

- 'அதிகாலை' நண்பர்கள்

புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Saturday, 13 December 2008 )
 
Newer news items
Older news items
<< Previous Page          
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW