|
மலையாளத்தில் புகழ் பெற்ற கதை ஆசிரியர் பத்மராஜன், கதை வசனம் எழுதி பரதன் இயக்கத்தில் 1978-ல் வெளி வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் தான் "ரதி நிர்வேதம்". அன்று இந்தப்படத்தின் கதாநாயகி ஜெயபாரதி. பதினாறு வயது பையனுக்கும், ஜெயபாரதிக்கும் நடக்கும் அந்தரங்க உறவுதான் படம்.
இந்தப்படம்தான் இப்போது தமிழில் "அழகான பொண்ணுதான்" என்ற தலைப்பில் நமிதா நடித்து வெளிவர இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. பதினாறு வயது பையனோடு படுக்கை அறைக் காட்சியில் நடிக்கும்போது, நமிதா சிறு தடுமாற்றமாகி நடிக்க மறுத்துவிட்டாராம். நான் பெரிய பெரிய ஹீரோக்களோடு நடிக்கும்போது எந்த தடுமாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் 16 வயது பையனோடு படுக்கை அறை காட்சியில் நடிக்கும்போது என்னால் நடிக்க இயலவில்லை என நமிதா பின்வாங்க, அதன்பிறகு இயக்குனர் "திரு" இவர்கள் இருவருடைய காட்சியை தனிதனியாக எடுத்ததாக செய்தி.
என்ன மாஸ்டர் ஒரு மாதிரியா இருக்கீங்க?....
ஏம்பா! வயித்தெரிச்சல கௌப்புற? அந்த இயக்குனர முன்னாடியே போய் பாக்காம விட்டுட்டோமேன்னு ரொம்ப ஃபீலிங்க்ஸ்-ல இருக்கேன்.... Last update : 17-12-2009 12:57
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|