|
ரஜினி, கமலுடன் ஒரு காலகட்டத்தில் ஜோடி சேர்ந்து கலக்கின ராதா, இப்போ தன் மகளை களம் இறக்கி இருக்காங்க. முதல் வாய்ப்பு மலையாள திரைபடத்துல. படம் பேரு "ராஜா ரவிவர்மா". ஹீரோ யாரு தெரியுமா? நம்ம கேமிராமேன் சந்தோஷ் சிவன்.
கேமிரா மேனா இருந்து, இயக்குனராகி இப்போ "ராதா ஆண்ட்டி" மகளோட சந்தோஷமா ஹீரோ ஆயிட்டாரு. சந்தோஷ் சிவன் நடிப்பை பாத்து மிரண்டு போன ராதாவின் மகள், தன் அம்மாவிடம் "மம்மி" இந்த அங்கிள் சூப்பரா நடிக்கிறாரு என்றதும், ராதா தனது மகளை தனியாக கூப்பிட்டு, "இப்படி யூனிட் முன்னாடி ஹீரோவை "அங்கிள்"னு கூப்பிடக்கூடாதுனு செல்லமா எச்சரித்தாராம். ராதா ஆண்ட்டி கோடம்பாக்கத்துல பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லம் அங்கிள் தானே. உண்மைய சொன்னதுக்குப்போய் புள்ளையத் திட்டுறதா? வேணுன்னா ஒண்ணு பண்ணுங்க ஆண்ட்டி. ஒங்க மகளை நம்ம நமிதா பாட்டி மாதிரி... ஸாரி பார்ட்டி மாதிரி எல்லோரையும் "ஏ மச்சா-னு" மலையாளத்துல கூப்பிட சொல்லுங்க.... கொஞ்சம் கிளுகிளுப்பா இருக்கும்...ஹி..ஹி...ஹி..
- பரோட்டா மாஸ்டர் Last update : 14-12-2009 17:05
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|