Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

தரை, கடல், கண்காணிப்புப் பொறுப்பு:இந்திய நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 10-08-2009 21:47

Favoured : 13

Published in : செய்திகள், இலங்கை

சிறிலங்காவின் முக்கிய பகுதிகள் மற்றும் வடக்கு - கிழக்கு தரை மற்றும்  கடல் பகுதிகளை கண்காணித்து அது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக சென்னையை மையமாக கொண்ட தனியார் புலனாய்வுத்துறை நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா ஒப்பந்தம் செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை மிகப்பெரும் மனிதவலு மற்றும் தொழில்நுட்ப, அனைத்துலக ஆதரவுடன் முறியடித்து அதன் முக்கிய தலைவர்களையும் அழித்துவிட்டதாக சிறிலங்கா தெரிவித்து வரும் நிலையில் சிறிலங்காவின் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் அதிகமாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையை மையமாக கொண்டு இயங்கும் 'பனாஸ்' என்னும் தனியார் புலனாய்வு நிறுவனத்தை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தற்போது ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 மில்லியன் சிறிலங்கா ரூபாய்கள் பெறுமதியான இந்த ஒப்பந்தம் மூலம் தமிழர் தாயக கடற்பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் கண்காணிக்கப்படவுள்ளதாகவும் சிறிலங்காவின் தலைநகரில் தமிழர்களின் நடமாட்டம், செயற்பாடுகள், வடக்கு - கிழக்கில் இருந்த செல்லும் தமிழர்களின் நடவடிக்கைகள் என்பன கண்காணிக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

வடக்கு - கிழக்கு கடற்ரைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில் சிறிலங்காவின் மொத்த கடற்பகுதியும் கண்காணிக்கும் பொறுப்பும் இந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படவிருக்கின்றது.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கருவிகள் மற்றும் கணிணி தொழில்நுட்பங்கள் இந்த கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளன. வெப்ப உணர் ஒளிப்படக்கருவிகள் நகரும் பொருட்களின் இயல்புகளை அறியும் கண்காணிக்கும் கணிணி மென்பொருட்கள் இதில் உள்ளடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஒளிப்படக்கருவிகள் தற்போது உள்ள சாதாரண கருவிகளைவிட நுட்பமானவை என்றும் கடலின் 20 கிலோமீற்றரில் நகரும் பொருட்களின் ஒளிப்படங்களை பெற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவை எனவும் தெரிவித்துள்ள இந்திய தனியார் நிறுவனமான பெனாரசின் அதிகாரி ஒருவர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த மென்பொருள் கடலில் நகரும் பொருட்கள் பற்றிய தரைவுகளை தன்னிச்சையாக சேகரித்து மத்திய கட்டுப்பாட்டு நிலையத்துக்கு சமிக்ஞை செய்யும் தன்மை வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் படைத்துறை ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு கூறி வந்தாலும் அவர்கள் மீள ஒன்றிணையக்கூடிய ஏதுநிலை இருப்பதாக அச்சமடைந்து வருகின்றதாக தெரிவித்தள்ள பெனாரசின் அதிகாரிகள், கடல் கண்காணிப்புக்கு அப்பால் நிலப்பரப்புகளும் கண்காணிக்கப்படவுள்ளன என்றும் குறிப்பாக இறுதிக்கால போர் நடைபெற்ற பகுதிகள் குறிப்பாக விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த வடக்குப் பகுதிகள் இவ்வாறு கண்காணிப்புக்குள் வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இக்கண்காணிப்புக்கு தற்போது உள்ள கண்காணிப்பு கருவிகளுக்கு பதிலாக நவீன மயப்படுத்தப்பட்ட இணைய இணைப்புக்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ரீதியில் இயங்கும் கருவிகள் பயன்படவள்ளதாகவும் இவை சிறப்பு தகமைகள் மிக்க சிறப்பு அதிகாரிகளினால் கண்காணிக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகளின் தொலைபேசிகள், செல்லிடப்பேசிகள் என்பன இணைக்கப்பட்டு இந்த கண்காணிப்பு ஒரு வலைப்பின்னலுக்குள் வருவதுடன் அதிகாரிகள் எங்கு இருந்தாலும் எந்த நேரத்திலும் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் கண்காணிப்பை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டடுள்ள திட்டத்தின் பிரதி ஒன்று தமிழ் நாட்டு அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டின் கடற்கரைகளை கண்காணிப்பதை நோக்காக கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள 'பனாரஸ்' நிறுவன அதிகாரி அது சம்பந்தமான முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசு இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மறுவாழ்வு மற்றும் முகாமில் உள்ள மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான நிநி இல்லை எனக்கூறி அனைத்துலக நாடுகளிடம் கையேந்தி நிற்கின்ற நிலையில் இவ்வாறான பெரும் நிதிச் செலவுடனான பாதுகாப்பு அதிகரிப்பு நடவடிக்கை மற்றும் தமிழ்ர் தாயகத்தின் மீதான இராணுவ ரீதியான ஒடுக்குமுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
TNC

Last update : 10-08-2009 21:47

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
B8W         E3U      
  U    L      1   ETB
  J   M52     1      
  W    K      B   7OX
  Y           2      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW