Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

தேர்தலின்போது அரசு அதிகாரம் அனைத்து மட்டங்களிலும் தலைவிரிப்பு:த.தே.கூ PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 10-08-2009 17:59

Favoured : 13

Published in : செய்திகள், இலங்கை

வடபகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது அனைத்து மட்டங்களிலும் அரசின் அதிகாரம் முன்னர் எப்போதும் இல்லாதளவுக்குப் பயன்படுத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருக்கின்றது.

அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா தெரிவித்திருக்கின்றார்.

"மக்களை வாக்களிக்கத் தூண்டுவதற்காகவும், அதற்காக அவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அரசு பல்வேறு உபாயங்களைக் கையாண்டதைக் காணக்கூடியதாக இருந்ததாக யாழ்ப்பாண வாக்காளர்கள் தெரிவிக்கின்றார்கள்" என இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சிறீகாந்தா மேலும் குறிப்பிட்டார்.

"இந்த வெற்றியையிட்டு அரசு பெரிதாகக் கூக்குரலிடுகின்றது. அவர்கள் எவ்வாறு வெற்றி பெற்றார்கள் என்பது எமக்குத் தெரியும். தடுத்துவைக்கப்பட்டுள்ள 3,00,000 மக்களையும் விடுதலை செய்த பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்திப் பார்க்குமாறு அரசுக்கு நான் சவால் விடுகின்றேன்" எனவும் அழைப்பு விடுத்த சிறீகாந்தா, அப்போதுதான் எமது மக்கள் எங்கே உள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளையில், இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட ஈ.பி.டி.பி.யின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமது கட்சியைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கின்ற போதிலும், அதனையிட்டு தான் மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்திருக்கின்றார்.

யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த 20 பேர் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் ஒன்பது பேர் மட்டுமே விருப்பு வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது தம்மால் 17 ஆசனங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துவந்த போதிலும், ஒன்பது ஆசனங்களை மட்டுமே பெற்றிருப்பதையிட்டு கருத்து வெளியிட்ட அவர், இத்தேர்தலில் தான் தோற்கடிக்கப்பட்டுவிட்டது போன்ற உணர்வைக் கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
TNC

Last update : 10-08-2009 17:59

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
5L6         1HC      
Q 6    F      P   S1O
QNE   Y1W   7R2      
  2    T      T   IH4
7FG         J9S      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW