Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

செல்வராஜா பத்மநாதன் கைது பற்றி இலங்கை அதிபர் மகிந்தவின் முதல் நேர்காணல் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 10-08-2009 17:36

Favoured : 34

Published in : நேர்காணல், சிறப்பு

கேபியின் கைது எவ்வளவு முக்கியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அவரது கைது இலங்கைக்கு மிக முக்கியமானது. ஏனெனில் அவர் தான் பிரபாகரனுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக இருக்கிறார். இப்போது அவர் எங்களிடம் உள்ளார். அவரை நாங்கள் எங்களது பாதுகாப்பில் வைத்திருக்கிறோம். அவர் இப்போது இலங்கையில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
Image

இது மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் உங்களுக்குக் கிடைத்த முதலாவது பெரிய வெற்றி என்று சொல்லலாம் அல்லவா? சரி, இதனைக் கொண்டு எவ்வாறு விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத மற்றும் பணப் பரிவர்த்தனைத் தொடர்புகளை முறியடிக்கப் போகிறீர்கள்?

என்னால் தனியே இதனைச் செய்ய முடியாது. சர்வதேசம் இதற்கு எமக்கு ஆதரவு வழங்க வேண்டும். இது அவர்களுடைய பொறுப்பெனவே நான் நினைக்கிறேன். எல்லா நாடுகளுடைய அரசாங்கங்களும் இணைந்து இதற்கு உதவ வேண்டும். பயங்கரவாதம் என்பது இலங்கைக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. அது முழு உலகுக்குமான பிரச்சினை. எல்லோரும் இணைந்து தான் அதனை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

- கேபியின் கைது பற்றி


நான் நினைக்கிறேன். அவர் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று நான் கதைக்கப் போவதில்லை. ஆனால் முக்கியமான விடயம் என்னவென்றால் அவர் எங்களிடம் தற்போது உள்ளார் என்பது தான். அவரைக் கைது செய்ய எங்களுக்குப் பலர் உதவினார்கள். அவர்களுக்கு இவ்விடத்தில் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

- பயங்கரவாதத்தைக் கையாள்வது குறித்து


எங்கள் எல்லோருக்கும் உள்ள பொறுப்பு அது. இது ராஜபக்சவின் வழிமுறையா அல்லது புஷ்ஷின் வழிமுறையா என்பதல்ல பிரச்சினை. எங்களிடம் ஒரு வழிமுறை இருக்கிறது. அதனைக் கொண்டு பயங்கரவாதத்தை இல்லாதொழித்தோம். நாங்கள் எல்லோரும் இணைந்து உலகிலிருந்தே பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும். அது தான் நாங்கள் செய்ய வேண்டியது.

- பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது குறித்து

பயங்கரவாதத்திற்கான நிதி என்பது ஆயுதக்கடத்தலிலிருந்தும் போதைவஸ்து கடத்தலிலிருந்தும் தான் கிடைக்கிறது. எனவே அதனை நாங்கள் முறியடிக்க வேண்டும். எனவே ஆயுத வியாபாரிகளும் போதைவஸ்து வியாபரிகளும் ஒழிக்கப்பட வேண்டும்.

- புலிகளின் வலைப்பின்னல் குறித்து

தெற்காசியப் பிராந்தியத்தின் பல நாடுகளிடையே இவர்கள் சுதந்திரமாக உலாவி வருகிறார்கள். அவர்கள் அங்கு தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இன்னும் சில மேற்கு நாடுகளிலும் அவர்கள் பலமாக இருக்கிறார்கள்.

- இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து

இது நிச்சயமாக உள்நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் தீர்வு தான். நாங்கள் வெளியிலிருந்து எதனையும் பிரதி பண்ண விரும்பவில்லை. முக்கியமாக மேற்கிலிருந்து, குறைந்த பட்சம் அயல்நாடுகளிடமிருந்து கூட எதனையும் நாம் பிரதி பண்ண விரும்பவில்லை. எல்லா வகையான தீர்வுகள் தொடர்பாகவும் அக்கறை செலுத்தலாம். தீர்வு நாட்டினுள்ளிலிருந்து தான் எழும். உண்மையான தீர்வு மக்களிடமிருந்து வரும். அது எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கும். எல்லா சமூகங்களாலும் அங்கீகரிக்கப்படக் கூடியதாக இருக்கும்.

- அபிவிருத்தி குறித்து

என்னுடைய பிரதானமான நோக்கு இப்போது இடம் பெயர்ந்தவர்களைக் குடியேற்றுவது தான். கடந்த 30 வருடங்களில் வடக்கு கிழக்கு எத்தகைய அபிவிருத்தியையும் காணவில்லை. நாங்கள் இப்போது அதனை ஆரம்பித்திருக்கிறோம். அடிப்படைக் கட்டுமானங்களுக்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறோம். அதன்பின்னர் இம்மக்களை மீளக் குடியேற்ற வேண்டும். அதன் பின்னர் அபிவிருத்தி தானாகவே வரும். அபிவிருத்தி இல்லாமல் எதனையும் அடைந்துவிட முடியாது. அதற்கு முதலில் அப்பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும். அதன்பின்னர் நீர், மின்சாரம், குடியிருப்பு, வீதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றைத் தான் நாம் இப்போது செய்ய ஆரம்பித்துள்ளோம்.

180 நாட்களுள் அவர்களை மீளக் குடியேற்றுவது தான் எங்களது திட்டமாக இருக்கிறது. அதற்குள் 60 வீதத்தினரையாவது நாம் மீளக் குடியேற்றி விட்டால் நாம் திருப்தியடையலாம்.

- அதிகாரப் பகிர்வு இந்தப்பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று நினைக்கிறீர்களா?

எங்களுடைய அரசமைப்பிலேயே அதிகாரப்பகிர்வு இருக்கிறது. ஆனால் நாங்கள் எவ்வளவு கொடுக்கப் போகிறோம் என்பது தான் கேள்வியாக உள்ளது. அது ஒரு பிரச்சினை இல்லை. அது விரைவில் செய்யப்பட்டு விடும். மாநகர சபைகள், மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் என பல விடயங்கள் இருக்கின்றன. அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் போது அவர்களுக்கு மேலதிகமாக எதனைக் கொடுக்கலாம் என்று பார்க்கலாம். 80 வீதமான தமிழர்கள் தெற்கில் சிங்களவர்களுடன் வாழ்கிறார்கள். நான் சொல்கிறேன் சிறுபான்மையினர் என்று இங்கு எவருமில்லை.


- 13வது திருத்தச்சட்டம்

நாங்கள் அதனோடு புதிதாக ஒன்றை கொடுக்கவுள்ளோம். அதாவது புதிய சேம்பர் ஒன்றைக் கொண்டு வர உள்ளோம். இரண்டாவது சேம்பர் எனும் அதனூடாக மாகாணங்களில் சிறுபான்மையோருடன் அதிகாரங்களைப் பகிர உள்ளோம்

- அது எவ்வாறு அமைந்திருக்கும்?

அதனை நாம் இன்னமும் கலந்துரையாடவில்லை. அதற்கான பிரேரணைகள் உள்ளன. எல்லா அரசியல் கட்சிகளையும் அழைத்து அவற்றை நாம் அவர்களுடன் கலந்தாராய்வோம்.

- சமஷ்டி பற்றி

இல்லை. இல்லை. சமஷ்டி என்ற பேச்சுக்கே இலங்கையில் இடம் இல்லை. அது இங்கிருந்து தூக்கி வீசப்பட்டு விட்டது. மக்களிடமிருந்து வரும் ஒரு தீர்வே நடைமுறைப்படுத்தப்படும். சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் புத்திஜீவிகள் ஆகியோர் கலந்துரையாடி ஒரு தீர்வைக்காணுவர். யாராவது வந்து மேற்கில் இப்படி நடந்தது அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொன்னால் நாம் அதனை ஏற்கப் போவதில்லை.

- தமிழர்களுக்கான தீர்வு

ஜேஆரோ சந்திரிகாவோ ரணிலோ எவரும் பிரபாகரனுடன் பேசவே முயன்றார்கள். 13வது திருத்தச் சட்டத்தை பிரபாகரன் முதலில் ஏற்றிருந்தார். கையொப்பமுமிட்டிருந்தார். பின்னர் திடீரென அவர் அதனை நிராகரித்தார். நானும் கூட அவருடன் பேச முயன்றேன். ஏழு மாதங்களாக நாங்கள் முயற்சி செய்தோம். அவர் பேச்சுக்கான கதவை மூடிவிட்டார். இறுதியாக நான் இவ்வழியைத் தேர்ந்தெடுத்தேன்.
TNC

Last update : 10-08-2009 17:36

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
CJO         H5L      
  9    E      J   SIA
WQT   YIH   CLE      
B      9      2   L66
MKH         693      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW