Calendar Date

Oct
25
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!              தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...              சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?              ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்                    
Please install the DS-Syndicate component.
பிரித்தானியாவில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் வீதியில் நின்று போராட்டம் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 19-05-2009 01:30

Favoured : 304

Published in : செய்திகள், உலகம்

Imageபுலம்பெயர் தமிழ் இனம் வருகின்ற செய்திகளை மிகவும் கவலையோடு அவதானித்த வண்ணம் உள்ளனர். ஈழ விடுதலைப் போராட்டம் இன்று ஒரு முக்கிய கட்டத்தில் நிற்கின்றது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பிரித்தானியாவில் மக்கள் தமது வரலாறுக்கடமையை ஆற்றுமுகமாக கவலை தோய்ந்த எழுச்சியோடு லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கூடியுள்ளனர். மக்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தமது  போராட்டத்தை தொடர்கின்றனர்.

1. காயமடைந்த மக்கள் அனைவருக்கும் உடனடியாக முருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் அதன் மூலம் மேலதிகமாக உயிர் இழப்புக்கள் தவிர்க்கப் பட வேண்டும்

2. பிரித்தானியா முதலான பல்வேறு நாடுகள் போர்ப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற வேண்டுமென தொடந்தும் வலியுறுத்தி வந்தன. அப்படி வெளியேறிய மக்களிற்கான பாதுகாப்பை இவ்வரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அம்மக்கள் இயல்பு நிலை வாழ்க்கைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும்

3. இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களும் இனப்படுகலைகளும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லப்பட வேண்டும்.

4. தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்பட்டு அவர்களை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டையும் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானிய தமிழ்சமூகம் தொடர்ந்தும் போராடி வருகின்றது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் புலம் பெயர் சமூகத்திடம் ஒரு பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளதை உணர்ந்துள்ள மக்கள் தமது போராட்டம் தொய்வேதும் இன்றித் தொடரும் எனக் கூறியுள்ளனர்

அதேவேளை பிரித்தானியாவில் அமைந்துள்ள அமேரிக்கத் தூதுவராலயத்தின் முன்னர் தொடர்ந்தும் இரண்டாவது நாளாகக் குழுமியுள்ள மக்கள் அமேரிக்க அதிபரிடம் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் பதாகைகளை தாங்கிய வண்ணம் அமைதிப் போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.

அதேவேளை திரு. டிம் மார்டின் அவர்கள் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும், அமேரிக்கா தனது செய்மதிகள் மூலம் வன்னியின் உண்மைநிலைகளை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் நிறுத்தி அமேரிக்கத் தூதுவராலயத்தின் முன் உண்ணா நோன்பை மேற்கொள்கின்றார். டிம் மாட்டின் வன்னியில் நீண்ட காலமாக மனித நேயப் பணிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
TNC

Last update : 19-05-2009 01:30

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
8L1         AMA      
  1    F    6     R7P
ERW   FRT   98T      
P      T    3 2   T4T
849         NPH      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW