|
நடிகர் பிரசாந்துக்கும், கிரக லட்சுமிக்கும் நடந்த திருமணம் செல்லாது என்று குடும்ப நல கோர்ட்டு தீர்ப்பளித்தது. கிரக லட்சுமி குடும்பநல கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்து இருக்கிறார். நீதிபதிகள் பி.ஜோதிமணி, டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் நேற்று இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றனர்.
"குடும்ப நல கோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், பிரசாந்த் மறுமணம் செய்து விடுவார்'' என்று கிரகலட்சுமியின் வக்கீல் மோகன் வாதாடினார். "பிரசாந்த் தரப்பில் விளக்கத்தை கேட்காமல் இந்த சூழ்நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு குறித்து பதில் தருமாறு, பிரசாந்துக்கு நோட்டீசு அனுப்பும் படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் 19-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
- முதுவை ஹிதாயத் Last update : 14-05-2009 05:26
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|