Calendar Date

Sep
16
2014
Today
 • Advertisement
 • Advertisement
 • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்              ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!                     தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்                     அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்      
Please install the DS-Syndicate component.
ஒலி இதழ் : 'பிரைம் பாயின்ட்' சீனிவாசனுடன் இ-நேர்காணல் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 23-04-2009 10:43

Favoured : 237

Published in : நேர்காணல், சிறப்புசீனிவாசன் : ஆமாம். ஆடியோ, வீடியோ இரண்டையும் கணக்கிடலாம். ஆடியோ வடிவம், ஒலிபரப்பிற்கு மிகவும் ஏற்றது. இதனை ஐபாடுகளிலும் டவுன்லோடு செய்யலாம். நான் www.poduniversal.com தளத்தில் இப்போது ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியைப் பற்றிய ஒலிப்பதிவினை ஒலி, ஒளி வடிவங்களில் அளித்துள்ளேன்.

அ.க.: தொலைபேசி வழி ஒலிப்பதிவு குறித்து விரிவாகச் சொல்லுங்கள்.

சீனிவாசன்: டாக்டர் கலாம் அவர்களை ஆறு முறை தொலைபேசியில் ரிகார்ட் செய்திருக்கிறேன். முதலில் அவர்கள் நேரத்தைத் தீர்மானித்த பிறகு, அவர்களது நம்பரை டயல் செய்வேன். நம் தொலைபேசியில் ஒரு ஜாக் இணைத்து, அதன் ஒரு பகுதியை என்னுடைய லாப்டாப்பில் செருகி விடுவேன். நம்முடைய பேட்டியைத் துவங்குமுன், எதிர் முனையில் இருப்பவரிடம் நாம் ரிகார்ட் செய்கிறோம் என்று தெரிவிப்பதுதான் மரபு. அவர்களது உரையாடலை audacityஇல் ரிகார்ட் செய்து விடுவேன்.

அ.க.: அப்துல்கலாம் உள்ளிட்ட பெரும் பிரமுகர்களை நேர்கண்டிருக்கிறீர்கள். அவர்கள் இந்த முயற்சியை எப்படி பார்த்தார்கள்?

சீனிவாசன்: முதன் முதலில் டாக்டர் கலாம் அவர்கள் ஜனாதிபதி பதவி முடிந்து வந்தவுடன் அவருக்கு என்னுடைய ஆசையை தெரிவித்தேன், அவரை இண்டர்வியூ செய்ய வேண்டுமென்று. அபோது இமெயிலில், அவரைப் பற்றி நான் ஏற்கெனவே செய்திருந்த ஒலிப்பதிவுகளை அனுப்பியிருந்தேன். அதையெல்லாம் அவர் பார்த்துவிட்டு, ஒரு நாள் மாலை திடீரென்று என்னுடைய மொபைலுக்கு போன் செய்து, பாட்காஸ்ட் பற்றிய முழு விவரங்களையும் சுமார் 20 நிமிடங்கள் கேட்டறிந்தார். எப்படி ரிகார்ட் செய்கிறேன், எந்த மென்பொருள் உபயோகப்டுத்துகிறேன் என்பது பற்றியெல்லாம் கேட்டறிந்தார். அதற்கு பிற்கு, அதே நாள் இரவு 8 மணிக்கு நேரம் கொடுத்தார். அப்போதுதான் அவரை முத்ல் முதலாக தொலைபேசியில் ரிகார்ட் செய்து வெளியிட்டேன். அண்மையில் கூட, தேர்தல் தொடர்பாக இளைஞர்களுக்கு என் பாட்காஸ்ட் வழியே தான் அறிவுரை வழங்கினார். அதை நான் தான், பத்திரிகைகளுக்குச் செய்தியாகக் கொடுத்தேன். பல பிரபலங்கள் என்னுடைய பாட்காஸ்ட்டைக் கேட்கிறார்கள்.

அ.க.: நீங்கள் நேர்கண்ட முக்கிய பிரமுகர்களில் சிலரைச் சொல்லுங்கள்.

சீனிவாசன்: டாக்டர் கலாம், டி. எஸ். கிருஷ்ணமூர்த்தி, விக்கிபீடியாவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ், டாடா நிறுவனத்தில் இரண்டாம் நிலையிலுள்ள கிஷோர் சவுக்கர், பல எம்.பிக்க்ள், இந்தியா விஷன் நூலைக் கலாமுடன் இணைந்து எழுதிய டாக்டர் ஒய். எஸ். ராஜன், அணமையில், சிதம்பரம் மீது ஷூ வீசிய ஜர்னைல் சிங்கையும் அடுத்த தினம் மொபைலில் பேட்டி கண்டு வெளியிட்டேன்.

அ.க.: இன்னாரைப் பேட்டி எடுக்கலாம் என எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? பலரும் அறிஞர்களாய் இருக்கிறார்களே?


சீனிவாசன்: இது பாட்யூனிவர்சல். எந்த சப்ஜெக்டும் எடுக்கலாம். மனத்தில் தோன்றும் போது, உடனடியாக தொலைபேசியில் பேட்டி கண்டுவிடுவேன். பிரபலங்களில், இரா. செழியன், மற்றும் என். விட்டல் கூட என்னிடம் பேட்டி கொடுத்துள்ளார்கள். பல வெளிநாட்டுப் பிரபலங்களும் பேட்டி கொடுத்துள்ளார்கள்

அ.க.: நேரில் பார்க்காமல் பேட்டி கொடுக்க மாட்டேன் என யாரேனும் சொன்னதுண்டா?

சீனிவாசன்: இதுவரை அந்தப் பிரச்சினை வந்ததில்லை. இமெயில் அனுப்பினால், அவர்கள் உடனடியாக poduniversal தளத்திற்குச் சென்று பார்க்கிறார்கள். உடனடியாக ஒத்துக்கொண்டு விடுவார்கள்.

அ.க.: இத்தகைய ஒலிப் பதிவின் காப்புரிமை, பேட்டி கொடுத்தவர் - எடுத்தவர் இருவருக்கும் உரியதா?

சீனிவாசன்: காப்புரிமை, பதிப்பாளருக்குத்தான் உண்டு. இந்தப் பேட்டிகள், பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன் சார்பில் எடுக்கிறேன். ஆனால் நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. நல்ல விஷயங்கள் எல்லா இடங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பது தான் என் ஆவல். பாட் யூனிவர்சலுக்கு கிரெடிட் கொடுத்து அதை யார் வேண்டுமானாலும் உபயோகிக்க அனுமதிக்கிறேன். பலர் என்னிடம் அனுமதி கேட்டு உபயோகிக்கிறார்கள். பல சமயங்களில், பாட் யூனிவர்சலில் வந்தவுடன், மெயின் லைன் மீடியாக்களும் பிக் அப் செய்கின்றன. உதாரணம், அண்மையில் தேர்தல் தொடர்பாக, கலாம் கொடுத்த பேட்டி, இந்தியா முழுவதும் வெளிவந்தது.

அ.க.: ஒலிப்பதிவின் கால எல்லை அனைத்தும் 10 - 12 நிமிடங்கள் என இருக்கிறதே? இது திட்டமிட்டதா? அதற்குள் முடித்துவிடுவீர்களா?

சீனிவாசன்: இண்டர்நெட்டில், இளைஞர்கள் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு மேல் கேட்க ஆர்வமாக இருக்க மாட்டார்கள். பத்து நிமிடத்தில் இருந்தால், கேட்பதற்கு ஆர்வம் வரும். அதனால் தான், நான் 15 நிமிடங்களுக்கு மிகாமல் செய்வேன். சில சமயங்களில், சில பிரபலங்களின் பேட்டிகூட இருந்தாலும் கேட்பார்கள். அண்மையில் நான் வெளியிட்ட எஸ். வி. சேகர் பேட்டி, அதிகமான நேரம் இருந்தாலும், நிறைய பேர் கேட்டார்கள். இன்னும் கேட்கிறார்கள்.

அ.க.: ஒலிப் பதிவுகளை எப்படி திருத்துகிறீர்கள் (எடிட் செய்கிறீர்கள்)? இசை சேர்க்கிறீர்கள்?

சீனிவாசன்: இண்டர்நெட்டில், இசைக்கும் காப்பிரைட் உண்டு. அதனால், திரு. ரங்கசாமி பார்த்தசாரதி அன்புடன் கொடுத்த இசையை நான் உபயோகிக்கிறேன். நான் முன்பு சொன்னபடி, அடாசிடியில் எடிட் செய்கிறேன். இது ஒரு ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர்.

அ.க.: தொலைபேசியில் பேட்டி எடுக்கும்போது மின் தடை, பிற தடைகள் ஏற்பட்டதுண்டா?


சீனிவாசன்: மின் தடை ஏற்பட்டாலும், தொலைபேசி வேலை செய்யும். இதை நான் லேப்டாப்பில் தான் ரிகார்ட் செய்கிறேன். அப்படி ரிகார்ட் செய்யும் போது, மெயின் பவரைத் துண்டித்து விடுவேன். மெயின் பவரில் ரிகார்ட் செய்யும் போது ஒரு 'ஹிஸ்' சவுண்டு வரும். அதைத் தவிர்க்க, பாட்டரியில் தான் ரிகார்ட் செய்கிறேன். அதனால், பவர் இல்லாவிட்டாலும், எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.

அ.க.: ஆங்கிலத்தில் தொடங்கிய உங்கள் ஒலி இதழ் முயற்சி, தமிழுக்கு எப்போது வந்தது?


Last update : 23-04-2009 10:43

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
TUH     ETC   
P T  G  X Y  9OD
PY3  B79  E I   
W D  J  T W  82H
DQF     G3J   
   
   

No comment postedmXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
          Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW