Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

அரசியலில் இலக்கியவாதிகள் - அருளடியான் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 25-03-2009 01:47

Favoured : 17

Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை

சிற்றிதழ்களுக்குள் நடக்கும்  சண்டையையும், எழுத்தாளர்களுக்குள் நடக்கும் அக்கப்போரையும் நாம் அறிவோம். இவையெல்லாம் இலக்கியத்தில் நடக்கும் அரசியல். இவற்றைப் பற்றி நாம் பேசப்போவதில்லை. அரசியலில் ஈடுபட்டுள்ள இலக்கியவாதிகளைப் பற்றிய ஒரு பார்வையாக இக்கட்டுரையை எழுதியுள்ளேன். "எழுத்தாளர்களை அறிவாளிகளாகப் பார்க்கும் ஒரு சாராரையும், அவர்களை கோமாளிகளாகப் பார்க்கும் இன்னொரு சாராரையும் நம் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது." என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஓரளவு உண்மைதான். இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றிய அறிமுகமோ, அடிப்படை குடியுரிமைகள் பற்றிய புரிதலோ, இந்த நாட்டின் வரலாறோ, அதன் பன்மைத்துவமோ தெரியாத ஒருவர் இங்கு மிகப் பெரிய எழுத்தாளராக மதிக்கப்படுகிறார். மதச் சிறுபாண்மையினர் மீதான காழ்ப்புணர்ச்சி கூட அவரது தனித் திறமையாக மதிக்கப் படுகிறது. இது ஃபாசிசம் அல்லாமல் வேறு என்ன?Image

தி.மு.கவில் கனிமொழி, சல்மா, தமிழச்சி தங்கபாண்டியன் என பெண் கவிஞர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அ.இ.அ.தி.மு.கவில் நடிகர்கள் இருக்கும் அளவுக்கு இலக்கியவாதிகள் இல்லை. அங்கிருந்த கவிஞர் சினேகனும் நீக்கப்பட்டு விட்டார். காங்கிரஸில் கவிஞர் இந்திரா இருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சியில் எழுத்தாளர் சிவகாமி, கவிஞர்கள் குட்டி ரேவதி, சுகிர்தராணி ஆகியோர் சேர்ந்துள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் கலை இலக்கியப் பெருமன்றத்தின் கூட்டங்களில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் பங்கேற்கிறார். மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சில திங்களுக்கு முன் சென்னையில் மாநில மாநாட்டை நடத்தியுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி இவ்வாண்டின் சாகித்ய அகதமி விருதைப் பெற்றுள்ளார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் தி.மு.கவைச் சார்ந்தே தன் அரசியல் நிலைப்பாட்டை எடுக்கிறார். தி.மு.க நடத்தும் கவியரங்கத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இடம் பெறுபவர்.

 

பாட்டாளி மக்கள் கட்சி தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பை தோற்றுவித்துள்ளது. இந்த அமைப்பின் பொறுப்பாளர்களான எழுத்தாளர்கள் இராசேந்திரசோழன், பா. செயப்பிரகாசம் ஆகியோர் தேர்தல் புறக்கணிப்பை தங்கள் கொள்கையாகக் கொண்டவர்கள்.

 

கவிஞர் லீனா மணிமேகலை படைப்பாளிகளை ஒருங்கிணைத்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக,  டில்லியை உலுக்கும் போராட்டங்களை நடத்தினார்.

 

மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற இடதுசாரி அமைப்பின் ஆதரவாளர்கள் வினவு என்ற கூட்டு வலைப்பதிவை நடத்தி வருகின்றனர். இவர்களும் தேர்தலை புறக்கணிப்பவர்கள்தான். இந்துத்துவ சார்பாக சில எழுத்தாளர்கள் எழுதினாலும் அவர்களில் பா.ஜ.க உறுப்பினராகத் தங்களை காட்டிக் கொள்பவர்கள் யாரும் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

 

புதிய முஸ்லிம் அரசியல் கட்சிகளில் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய மக்கள் கட்சி ஆகியவை தங்கள் இலக்கியப் பிரிவை இன்னும் தொடங்கவில்லை. மனிதநேய மக்கள் கட்சியின் ஹாஜா கனி கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவைத் தமிழன் வலைப்பதிவர்களிடையே பரவலாக அறியப் படுபவர்.

 

இலக்கியவாதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். தி.மு.கவில் கவிஞர் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். நம் முதலமைச்சர் கலைஞரும் ஓர் இலக்கியவாதிதான். தமிழ் நாட்டில், வரும் மக்களவைத் தேர்தலில் இருந்து தேர்ந்தெடுக்கப் படுபவர்களில் எத்தனை பேர் இலக்கியவாதிகளாக இருப்பர்?

- அருளடியான்

Last update : 25-03-2009 01:47

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
THL         8CN      
C Y    5    A I   UCT
6OI   M1X   E W      
  R    T    1 S   G3Q
2HE         PAT      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW