Calendar Date

Sep
06
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

ஒதுக்கப்பட்ட கல் (பெரியவர்களுக்கு மட்டும்) - 4 : சாந்தி PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 08-03-2009 05:46

Favoured : 7

Published in : இலக்கியம், தொடர்

ஊரோரமாய் ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து டாடா சுமோவில் ஏறிவிட்டு,

"ஏம்மாவீடு செல்லுமுன் எங்கள் தோட்டம் ஒன்று உள்ளது அதை பார்த்துவிட்டுச் செல்வோமா?" எனக் கேட்டாள் நளினா.

"
தாராளமாய்.. வீட்டில்தான் பேசணும் என்றில்லை. உங்கள் வேலை எதுவும் தடைபட வேண்டாம்." என்றாள் புன்னகையுடன்.

வாகனம் சென்ற வேகத்தில் ஜன்னலின் அருகில் அமர்ந்திருந்தவள்  முகத்தில் விழும் கூந்தலைக்கூட மெதுவாக பின்னுக்குத் தள்ளிவிடும் அழகை ரசித்தாள் மலர். அவளின் சோகக்கதையை எப்படி ஆரம்பித்து தெரிந்து கொள்வது என்பதில் தடுமாறிக்கொண்டிருந்தாள்..

 இப்படித்தான் இருக்கும் நான் வளர்ந்த ஊரும்... ம் எனப்  பெருமூச்சு விட்டவள்,

ஆமா  நான் எதுல நிப்பாட்டினேன்?...ம்.. ஆஹ்ஹ்.. ஆமா... நான் பள்ளியில் வகுப்பறையில் அமர்ந்திருக்கும்போது, பள்ளி அலுவலர் ஒருவர் வந்து என் ஆசிரியரிடம் ஏதோ முணுமுணுக்க, அவர் என்னை அழைத்து தலைமை ஆசிரியர் அறைக்குச் செல்லுமாறு பணித்தார். நானும்  ஏதாவது நடனப்போட்டி, பாட்டுப்போட்டிக்காய் இருக்கும் என்றே மகிழ்வுடன் சென்றேன். அங்கு சென்றதும், என் அண்ணா அழுத முகத்தோடு நின்றுகொண்டிருந்தான். உடனே கலவரமடைந்தேன். தலைமை ஆசிரியரைக் கூட கண்டுகொள்ளாமல்   ஓடி சென்று  அண்ணாவைப் பிடித்து உலுக்கினேன். கண்டிப்பாக அம்மாவுக்குதான் ஏதோ  ஆகியிருக்கணும் என்ற பயத்தில்Image

அதற்குள் தலைமை ஆசிரியர் வந்து என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு அப்பாவுக்கு  நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் இருப்பதாகவும் எல்லாம் சரியாகிவிடும் என என்னென்னவோ சொன்னார்.... எதுவும் அந்தக் கணத்தில் ஏறவில்லை...
 

 அவனோ, "அப்பாவுக்கு.....

 

 

 
உடனே அப்பாவைப் பறந்து சென்று பார்க்கணும்போல் இருந்தது...
அண்ணாதான் சைக்கிளில் வைத்து வேகமாய் ஒட்டிச் சென்றான்,
அதுவரை அதிர்ச்சியில் இருந்த  நான், கத்தி அழ ஆரம்பித்துவிட்டேன். பின் மருத்துவமனையில் சென்றதும் அப்பாவை ஐ.சி.யு.வில் வைத்திருந்தபடியால் யாரையும் அனுமதிக்கவில்லை. என்னுடைய வாழ்வில் தாக்கிய முதல் சோகம் அது. அதன் பின் அப்பாவின்  செயல்கள் அனைத்தும் பாதியாகக் குறைக்கப்பட்டன. இனி எப்போதும் வரலாம் அதே அட்டாக் என்பதால் மிக கவனமாக இருந்தோம். நான் 10-ம் வகுப்பு தேர்வு முடிந்த வேளைஅண்ணா கல்லூரி மூன்றாவது வருடம். அதுவரை விட்டு வைத்திருந்த உயிர் எங்களையெல்லாம் பெரும் சோகத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றது. அம்மா  படுத்த படுக்கையில். நான் மேற்கொண்டு படிக்க இயலாத நிலைமை. அண்ணா, மாமாவின் பட்டறையில்  வேலைக்குச் சேர்ந்தான். இப்பத்தான் பல உறவுகளின் உண்மையான சுயரூபங்கள்  தெரிய ஆரம்பித்தன. பக்கத்தாத்து கிட்டு மாமா  கொஞ்சம் மன வளர்ச்சி குன்றிய தன் மகனுக்கு என்னைப் பெண்கேட்டு வந்தார். அடுத்த தெருவில் இன்னொருவர்  ரைஸ்மில்லை கவனித்துக்கொண்டு ரவுடித்தனம்  பண்ணும் தன் கடைசி மகனுக்கு, தானே எல்லாம் செய்வதாய் சொல்லி பெருமையாய்ப் பெண் கேட்டார். இதெல்லாம் ஏன்  என்று பார்த்தால், என் ஜாதகம் சரியில்லையாம். போகிற இடம் அழிந்துவிடுமாம் என பரவலாய் ஒரு  பேச்சு. அதையும் கிட்டு மாமாவே செய்துள்ளார்.  அவருக்கு எப்பவுமே என்மேல் ஒரு கண்ணு. மாமி வெகுளி...

அப்பப்ப எனக்கு உதவி செய்வதாய்
அங்கங்கே  தொடுவார். என்னால் இதை யாரிடமும் சொல்ல கூட முடியாத நிலை. ரோட்டில் நடந்து சென்றால் பார்வையிலேயே எல்லாத்தையும் மேயும் வெறி கொண்ட நாய்களின் பார்வை. அப்படியே செருப்பை கழட்டி அடிக்கலாமா, கொன்று விடலாமா என்று தோன்றும் அப்போதெல்லாம். ம்.. எப்படியெல்லம் வளர்ந்த நான் இன்று பலருக்கு விருந்தானேன்" பெருமூச்சு விட்டாள். பின் என் மாமா, தன் பெண்ணை என் அண்ணாவுக்கு மணமுடித்துவிட்டு அம்மாவையும் அழைத்து செல்ல எண்ணி, என்னை இரண்டாம் தாரமாக 45 வயது காரருக்கு மணம் முடித்து வைத்தனர். நடக்கின்ற எதையும்  எதிர்க்கும்  திராணியில்லை எங்கள் மூவருக்கும். திருமணம் ஆனதும்தான் தெரிந்தது   பகலில் மூத்த தாரத்துக்கு பணிவிடை செய்யவும், இரவில் அவருக்கு விருந்தாகவும், சொத்துக்கு வாரிசு பெத்துபோடுவதுமே   என் வேலை என்று. அப்போதுதான்   முதன்முதலாக  வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்ய எண்ணினேன். ஆனால் அதற்கும் கடவுள் வழிவிடாமல், அடுத்த பிரச்னையைத் தந்தார். அடிமை மாதிரி நடத்தியவர்கள் கருவில் குழந்தை சுமக்க  ஆரம்பித்ததும் கொண்டாடினார்கள். குழந்தை பிறந்து 3 மாதம் என்னிடம். அதன்பின்  என்னிடம் தராமல் பிரிக்க ஆரம்பித்தார்கள்..."
 
அதற்குள்  தோட்டமும் வந்தது. வேலையாள் ஒடி வந்து  கதவைத் திறந்து விட்டுஇளநீர் வெட்டித் தந்தான். அன்போடு சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள் மலர், சோலையாக  மலையடிவாரத்தில் குளு குளு என்றிருந்தது, அதை அறிந்தவளாய்,

"
இந்த தோட்டத்தை எனக்கு பரிசாகத் தந்துவிட்டு கோபித்துச் சென்றவர் இதன் முதலாளி" என சொல்லிவிட்டு விழுந்து விழுந்து  சிரித்தாள்.  வியப்புடன்  “ஏன் அப்படி எனக்கேட்டாள் மலர்... 

"நான் அவரை கல்யாணம் செய்யவில்லை" என்கிற கோபம். அவருக்கு அருமையான குடும்பம் உள்ளது. மேலும் இத்தொழிலுக்கு  வந்தபின்  பலரும் மீண்டும் குடும்ப வாழ்க்கைக்கு

செல்வதில்லை. அப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு.
ஒரு 10 வருடமாக  கடவுள் மீதும் வெறுப்பு கொண்டிருந்தேன். பணம் சம்பாதிப்பதில் வெறியாயிருந்தேன். என்னை அனுபவிக்க ஆசைப்பட்டவரையெல்லாம் என் காலடியில் விழச்செய்து  அதில் என் கோபத்துக்குப் பழி தீர்த்துக்கொண்டேன். என்ன செய்தாலும் உள் மனம் அமைதி அடையவேயில்லை. என் குழந்தையை மட்டும் நல்லதொரு கான்வெண்டில்   படிக்க வைத்தேன். அந்த பாதிரியார், மிக மிக நல்லவர், அன்பானவர். எல்லாருக்கும் உதவி செய்பவர்.
ஆனால் ...................அவருக்கும் .............மாதமொருமுறை..
.. எனச் சொல்லி புன்னகைத்தாள். பின் அவசரமாய்

"
இதையெல்லாம் எழுதிவிடாதேம்மா" என்று கேட்டுக்கொண்டாள்...

 

 

 

 

 

 

 

…..தொடரும்

Last update : 08-03-2009 06:09

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 

Display 1 of 1 comments

Nice thodar

By: manimaaran () on 09-03-2009 00:41

Nice thodar

By: manimaaran on 09-03-2009 00:41

Dear Santhi avargale.. 
 
am one of the silent readers of your thodar.. 
 
Ungal nadai,matrum urainadai nanraaga ullathu...Solvathu elimaiyaaga ullathu...Vazhthukkal

 

» Report this comment to administrator

» Reply to this comment...

Display 1 of 1 comments



Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
T8W         FOC      
  W    S      P   PTT
3XK   GYW   SRQ      
  N    9      N   QR9
DFT         LL1      
   
   



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW