Calendar Date

Apr
20
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி              கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?                     அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி              இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!             
Please install the DS-Syndicate component.
சந்தோஷ் சுப்ரமணியம் - விமர்சனம் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 13-04-2008 09:31

Favoured : 835

Published in : திரையுலகம், திரைவிமர்சனம்

Imageகுடும்ப சென்டிமென்டுகளின் பின்ணனியில், காதல் கதையை சரியான கலவையுடன் தந்திருக்கிறார் இயக்குனர் ராஜா. "ரீமேக் ரவி" என்ற பெயரை மறுபடியும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ரவி.  இந்த முறை தெலுங்கில் சூப்பர் ஹிட் "பொம்மரில்லு" படத்தை ரீமேக் செய்துள்ளார்கள்.( சொந்தமாக ஏதாவது யோசிங்கப்பா!!! )

Imageநடிப்பு: "ஜெயம் ரவி",ஜெனிலியா,பிரகாஷ் ராஜ்,கீதா,பிரேம்ஜி

இயக்கம்: ராஜா

இசை: தேவி பிரசாத்

தயாரிப்பு: எஜிஸ்

 

கதை- அரத பழசான கதை! ஆனால் அதை தந்திருக்கும் விதம் புதுமை மற்றும் அருமை. சந்தோஷ் (ரவி) ஒரு பணக்கார வாலிபன். தங்கத் தொட்டிலில் தாங்காத குறையாக அவனை அவனது குடும்பம் தாங்குகிறது.பாசமுள்ள பெற்றோர் (பிரகாஷ் ராஜ்,கீதா),அண்ணன் ,தங்கை என வெளியிலிருந்து பார்ப்பதற்கு அனைத்துமே நன்றாக உள்ளது.

ஆனால் உள்ளுக்குள் ஒரு இனம் புரியா சோகம்,தனித்தன்மை இழந்த ,செயலற்ற வாலிபனாய் அனுஹாசனிடம்(கெஸ்ட் ரோல்) புலம்புகிறார் ரவி. அனைவருக்கும் எது பிடிக்கும், என்ன செய்ய வேண்டும் என காலை சாப்பாடு முதல் அனைவருக்கும் எப்போதும் "நல்லது செய்ய" நினைக்கும் அந்த கால அப்பா பிரகாஷ் ராஜ்.ஹீரோயின் ஹாசினி (ஜெனிலியா) என்ட்ரீ!

அமெசூர்தனமான செய்கைகள், எங்கு திரும்பினாலும் நண்பர்கள் என கலகல டைப்! வேறென்ன? காலந்தொட்டு வரும் தமிழ் சினிமாவின் கூற்றை மாற்றாமல், விழுந்து விடுகிறார் நமது ஹீரோ! முதலில் அவளிடம் நட்பை பெருக்கிக் கொள்ள பிரயத்னம் செய்கிறார்.முதலில் நண்பர்கள் பிறகு காதலர்கள்..(ஏனப்பா..பார்முலாவை மாத்த மாட்டீங்களா?)

அடுத்து என்ன? நம்ம கணிப்பு படியே பெற்றோர் எதிர்க்கிறார்கள்.ஆனாலும் ஹீரோவின் கெஞ்சல் மற்றும் பிடிவாதத்தால் பிரகாஷ் ராஜ் யோசிக்கிறார்..இதைத் தொடர்ந்து வரும் சம்பவங்கள் இனிது. மற்றும் தமிழ் சினிமாவில் புதுமை. ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து பெண்ணான ஜெனிலியா,பணக்கார வாலிபனான ரவியும் ஒன்று சேர்கிறார்களா?  விடை வெள்ளித் திரையில்..

மூன்று மணி நேர படம். முதல் பாதி ரவி-ஜெனிலியா காட்சிகளை பாதி கட் செய்திருக்கலாம். சில நேரங்களில் இவர்களது காதல் நமக்கு தலை சுற்றுவதோடு மண்டை காய வைக்கிறது. படத்தின் உண்மையான ஹீரோ பிரகாஷ்ராஜ் தான்.படத்தின் ஹைலைட் மகன்-தந்தை உறவு தான். ஒருவருக்கு மற்றொருவர் விட்டுக்கொடுப்பதாக நினைத்து இருவரும் காயப்படுத்துகிறார்கள்.

கடைசியில் ரவி தனது அப்பாவிடம் மனதை திறந்து கொட்டித் தீர்க்கிறார்.குடும்ப உறவுகளில் பாசம் மற்றும் கோபம் இரண்டையும் மற்றவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும்.இப்படத்தின் முடிவு இதை வெளிப்படுத்துகிறது.

காதலிலும் சரி, குடும்பத்திலும் சரி, ஒருவரை மற்றொருவர் நன்றாக புரிந்து கொள்வதற்கு வெளிப்படையான மனம் திறந்த உண்மையான பேச்சு அவசியம் என்பதை சந்தோஷ் சுப்ரமணியம் உணர்த்துகிறது.

அன்பை பலவித பரிமாணங்களில் (நாயகன்-நாயகி,பெற்றோர்-மகன், அண்ணன்-தம்பி,நண்பர்கள்) படத்தில் காட்டியதற்கு இயக்குனருக்கு(ஒரிஜினல் தெலுங்கு) ஒரு சபாஷ் போடலாம்.

சந்தானம், பிரேம்ஜி, ஸ்ரீநாத் ரவியின் நண்பர்களாக அவ்வப்போது வந்து காமெடியென்ற பெயரில் காக்காய்கடி கடிக்கிறார்கள். நமக்கு நல்ல நேரம் அதிக நேரம் படத்தில் இவர்கள் வருவதில்லை. சத்யன் வீட்டு வேலைகாரனாக சிறிது சிரிப்பு வரவழைக்க முயற்சித்து வெற்றி பெருகிறார்.

சியாஜி-சிண்டே ஜெனிலியாவின் அப்பா- சரியான ஜவ்வு! சுத்தமாகபொருந்தவில்லை.
கேமராவை மிகவும் அருமையாக கையாண்டிருப்பது படத்தில் தெரிகிறது. "எப்படி இருந்தால்" பாடல் கண்ணுக்கு குளிர்ச்சியான இடத்தில் பமெடுக்கப்பட்டிருக்கிறது.

கொசுறு செய்தி:சடகோப்பன் ரமேஷ் -இப்படத்தில் அறிமுகம் ரவியின் அண்ணனாக .

சந்தோஷ் சுப்ரமணியம்- தமிழ்நாட்டில் முக்கால்வாசி அப்பாக்கள் பார்க்க வேண்டிய படம். குடும்பத்தோடு பார்க்கலாம்.

அதிகாலை ரேட்டிங் : ****

Last update : 13-04-2008 12:45

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
TBI         SBJ      
  F    B    9 2   8YP
K8J   8TM   7IS      
  H    A    1 2   4C6
LC5         68N      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW