|
"அண்டிப்பிழைக்க வந்தோம்; அரேபியாவில் வாடுகின்றோம்" - சவுதி அரேபியா, ரியாத்துக்கு பிழைப்புத் தேடிப்போன 100 தமிழர்கள் - சம்பளம் கிடைக்கமால், சாப்பிட வழியில்லாமல், சிறைக் கம்பிகளுக்குள் 5 சக தோழர்களை உட்கார வைத்துவிட்டு தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யாராவது உதவி செய்ய மாட்டார்களா? என்று ஏங்கித் தவிக்கின்றனர் - அந்த அப்பாவி மனிதர்கள். சிந்திய வியர்வைக்கு ஊதியமும், சிக்கல் இல்லமால் தாயகப் பயணமும் கிடைத்துவிடுமா? என்று கண்ணீர் சுமக்கும் கடித வரிகளை நம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதை அப்படியே இங்கே பிரசுரிப்ப்பதுடன் இது பற்றி நம் தமிழக முதல்வரின் சிறப்புக் கவனத்துக்கு அதிகாலை.காம் எடுத்துச் செல்ல இருக்கிறது.
தமிழர்களை எங்கும், எப்பொழுதும் நம் முதல்வர் அவர்கள் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. அது இவர்களின் வாழ்விலும் சாத்தியம்.
அவர்கள் அனுப்பிய கடிதம் இங்கே: Last update: 19-04-2008 12:35
|
|