பிரச்னைக்கு பின் ஜெயராம் இப்பொழுது சென்னையில்தான் இருக்கிறார். இரவில், வீட்டின் வெளியே ஏதாவது சத்தம் கேட்டால், லைட் போடாமல் மாடிக்கு ஏறி சென்று மறைந்து நின்று பார்க்கிறாராம். ஆள் உருவம் தெரிந்தால் உடனே மனிதர் பிரார்த்தனையில் உட்கார்ந்து விடுகிறாராம். விடிந்த பிறகும் மறைந்திருந்து வெளியே நோட்டம் இட்ட பிறகுதான் வெளியில் கிளம்புகிறாராம்... பாவம்! இப்போ ஜெயராம் வீட்டுக்கு யாராவது கதை சொல்ல போனால் கூட ஏகப்பட்ட விசாரணையாம். இருக்காதா பின்னே? என்ன கொடுமை சார்?? தெரியாமல் பேசியதற்கு இவ்வளவு டார்ச்சரா? என பார்க்கிறவர்களிடமெல்லாம் மனிதர் புலம்பித் தள்ளுகிறாராம்.
கல்யாணத்திற்கு பிறகு "ப்ரேக்" என்கிறார் சங்கீதா : கல்யாணமாகி ஒரு வழியா மறுபடியும் நடிக்க வந்திருக்கும் சங்கீதா "தம்பி கோட்டை" படத்தை தனக்கு கிடைத்திருக்கும் பெரிய ப்ரேக் என்கிறார். அப்படி என்னதான் கேரக்ட்டருனு பாத்தா தூள் பட சொர்ணக்கா, படையப்பா நீலாம்பரி... இந்த வரிசையில வர்ற வில்லி கேரக்ட்டராம். இந்த படம் தனக்கு பெரிய்ய்ய்யயயய பிரேக்-னு எத வச்சு சொல்றாங்கன்னு ஒரே குழப்பம்.... இதுல நரேனுக்கு ஜோடி "பூனம் பாஜ்வா". அப்போ வில்லி சங்கீதா பிரபுவுக்கு ஜோடியான்னு கேட்டா.... ஹிஹிஹி.. இல்லேங்கிற மாதிரி தலைய பெருசா... ஆட்டுறாங்க. எது எப்படியோ! இயக்குனர் ஹரியோட தாமிரபரணி பேட்டன் மாதிரி இல்லாம இருந்தா சரி.
தாமிரபரணியில் வில்லி நதியாவாம், அவருக்கு ஜோடி பிரபு-வாம்........
ரெக்கமென்ட் செய்யும் குட்டி தனுஷ் நடிச்சு பொங்கலுக்கு வெளிவந்த 'குட்டி' படத்த ஜெமினி லேப் தான் தயாரிச்சாங்க. ஜெமினி லேபுக்கும் சன் டிவிக்கும் நிறைய நெருக்கமாம். அதனாலதான் 'நினைத்தாலே இனிக்கும்' படத்த சன் பிக்சர்ஸ் ரிலீஸ் பண்ணாங்க.
"அண்ணே! கலியாணத்தன்னைக்கு யாரும் விருந்துல கஞ்சா கேட்டுப்பிராதிய" இது கஞ்சா கறுப்போட ஆர்டர். இவருக்கு ஒரு வழியா கடந்த 27-ம் தேதி கல்யாணம் முடிஞ்சது. கஞ்சா கறுப்பு பள்ளிக்கூடம் பக்கமே போகலைன்னாலும் பொண்ணு பட்டதாரி பொண்ணாம். பொண்ணோட ஊரு சிவகங்கை மாவட்டத்துல உள்ள கட்டாணிபட்டி கிராமம். சிவகங்கை திருப்பத்தூர் ரோட்டுல உள்ள மண்டபத்தில் வச்சுதான் கஞ்சா கறுப்பு (எ) கறுப்பு ராஜா கல்யாணம் முடிஞ்சது. சென்னையில ரிஷப்சன் கூட வேக்காததால சினிமாகாரங்க "என்னப்பா இது கல்யாணத்துக்கு அவங்க ஊருக்கு போக வேண்டியதிருக்கேன்னு" நொந்து போனதென்னமோ வேற கதை. ஆனா கஞ்சாவோட ஆசையோ தன்னோட ஊர்ல தன்னோட மாஸ் காட்டறதுக்காகவே சென்னையில ரிஷப்சன் இல்லை என்கிறது அவரது வட்டாரம்....
நிமிடத்துக்கு நிமிடம் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்.... என இடைவிடாத விளம்பர டார்ச்சர். மத்த எல்லா படமும் தரவரிசையில் நான்காவது ஐந்தாவது இடம். இவர்கள் வாங்கும் படம் மட்டும் எப்பவுமே முதலிடம். இது என்ன கொடுமை சாமி? இப்படி சன் டிவி வாங்குற படத்துக்கு மட்டும்தான் சன் டிவி ஓவர் பில்டப் கொடுக்குதுன்னு கோடம்பாக்கத்து காரங்க குமுறல் மட்டுமில்லங்க ரத்த வாந்தியே எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.
"நில் கவனி என்னை காதலி" இது நமீதாவோட படம். பெரிய அளவு ஓடல. நமீதா அதனால பெரிய கவலையில் இருப்பதாக தகவல். 'ஜெகன் மோகினி' அளவுக்காச்சும் இந்தப்படம் ஓடியிருந்தா தன்னுடைய சோலோ அந்தஸ்து உயர்ந்திருக்கும்னு நினைச்சிருக்காங்க அம்மணி.
படு குண்டாகிப்போன தன் உடம்பை ஸ்லிம் ஆக்கிவருகிறார் குஷ்பு. அதற்காக மருத்துவரிடம் ரகசிய சிகிச்சை செய்து, தனது உடல் எடையில் 15 கிலோ குறைத்து இருக்கிறாராம். பார்ப்பவர்கள் எல்லாம் அம்மணியை விசாரிக்க, அந்த டாக்டரை எல்லாரிடமும் குஷ்பு ஹெவியா ரெக்கமெண்ட் பண்ணுவதாகச் செய்தி. எந்த சைடு எஃபெக்ட்டும் இல்லையாம் (எஃபெக்ட்டே சைடுதானே...ஹி..ஹி...) வெறும் மூலிகை பொடி மட்டுமாம். (இதுக்குப் பேருதான் சொக்குப் பொடியோ!) இப்ப ஸ்லிம்மா இருக்கிற குஷ்பு படத்தயாரிப்பில மீண்டும் இறங்குகிறார். சுந்தர்.சி தான் கதா நாயகனும் இயக்குனருமாம். என்ன குஷ்பு மேடம்! நீங்க கதாநாயகி சான்ஸ் கேக்க வேண்டியதுதானே! ஓ...சுந்தர் ஒத்துக்க மாட்டாரா? ஆமா... ஆமா... வரைட்டி தேவைதானே.. அவரும் என்ன செய்வாரு பாவம்! வியாபாரம் தெரிஞ்ச குஷ்புவுக்கு இது தெரியாதா என்ன?
அமீர்கான் நடிச்சு இந்தியில சக்கைப்போடு போட்டு கொண்டிருக்கும் படம் 3 இடியட்ஸ். முதல் வார கலெக்ஷன் மட்டும் 240 கோடியாம். இந்தி கஜினியோட கலெக்ஷன் சாதனையெல்லாம் பின்னுக்குத் தள்ளிடுச்சாம். இந்த படத்த தமிழ்ல பண்ண கோடம்பாக்க ஹீரோக்கள் முண்டியடித்துக்கொண்டு போட்டி போடுகிறார்களாம். அதுல முதல் ஆளா நிக்கிறது நம்ம 'இளையதளபதி விஜய்'தானுங்கண்ணா.
நயமான அந்த ஒன்பதாரா நடிகைக்கு சமீபகாலமாக சரியாக சாப்பாடே இறங்குவதில்லையாம். முதலில் 'பசலை' நோய் என்று நினைத்தனராம் அவரின் நெருங்கிய வட்டம். ஆனால் அது இல்லையாம். காரணம்.... சாப்பாட்டை பார்த்தாலே அவருக்கு குமட்டுகிறதாம். திட உணவு, திரவ உணவு இரண்டையும் அவர் தொட்டுக்கூட பார்ப்பது இல்லையாம். இதனால், அம்மணியின் கவர்ச்சிக் கட்டுடல் நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே போகிறதாம். இதற்காக, ஒன்பதாராவை நல்ல மருத்துவரிடம் அழைத்துப்போகலாமா அல்லது மலையாள மாந்திரீகரிடம் அழைத்துப்போகலாமா? என்று அவருடைய பெற்றோர்கள் யோசித்து வருகிறார்கள்!
தர்மப் 'பிரபு'க்கும் மேலான ரசிகர்களே! ஒங்களுக்கு ஏதாச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்களேன் ப்ளீஸ்....
இதுக்கு ஒரே ஒரு மருந்துதான் உண்டு... நம்ம மாஸ்டர் கை பட்டாலே..... அட! அவர் கை பட்ட பரோட்டாவும் கொத்துக்கறியும் மூணு வேளைக்கு சாப்பிட்டுட்டு மறக்காம மாஸ்டரை ஒரு தடவ வந்து நேரா பாத்துட்டா எல்லாம் சரியாப் போயிடுமாம்!
அது சரி... ஈ மேட்டரை ஆ குட்டியிடத்து பறையாம் பெட்டோ?
சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்பது பழைய கதை. ஆனால் தற்போது வினியோகஸ்தர்களிடம் பட வியாபாரம் பற்றி பேச வேண்டுமெனில், "சுட்ட படம் வேண்டுமா? சுடாத படம் வேண்டுமா?" என்றுதான் பிஸினஸ் பேச வேண்டும்.